காங்கேசன்துறை: இந்தியாவுக்கான நுழைவாயில்!

45 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம், இந்து சமுத்திரத்தில் இந்தியாவுக்கான நுழைவாயிலாக இருக்க வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

வல்வெட்டித்துறையில் 10 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஆழிக்குமரன் நினைவு நீச்சல் தடாகத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கொழும்பு துறைமுகம் காரணமாக கொழும்பு நகரும், கட்டுநாயக்க விமான நிலையம் காரணமாக கம்பாஹா மாவட்டமும் முன்னேறியதைப் போலவே இந்த இணைப்பு நடவடிக்கைகள் வடக்குக்கு பெரிய ஊக்கமாக இருக்கும்.

பொருளாதாரத்தில் இந்தியா துரித வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவுடன் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்திகொள்ள வேண்டும். இந்திய உதவியுடன் பாலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுகிறது. 45 மில்லியன் ரூபா செலவில் காங்கேசன் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்து சமுத்திரத்தில் இது இந்தியாவிற்கான நுழைவாயிலாகவும் மாற வேண்டும்.

காணாமல் போனவர்களின் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் பிற நல்லிணக்க முயற்சிகள் குறித்து நான் விரிவாகக் கூற மாட்டேன். நிறைய செய்யப்பட்டுள்ளது.வடக்கு மாகாணம் தொடர்பாக அரசாங்கத்தின் பொருளாதார முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து பேசவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!