மகிந்தவுடன் கனடிய தூதுவர், அகாஷி தனித்தனியே சந்திப்பு

சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்கினன், நேற்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார். மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பில் ஜி.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதேவேளை, சிறிலங்காவுக்கான ஜப்பானின் சிறப்பு சமாதான தூதுவராக முன்னர் பணியாற்றிய, யசூஷி அகாஷியும் நேற்று மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன, கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ள நிலையிலும், இன்னும் சில மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையிலும், இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!