இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா – கனடாவும் கவலை

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, சிறிலங்காவின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று கனடா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கொழும்பில் உள்ள கனேடிய தூதரகம் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவில்,

“போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக, அவருக்கு எதிராக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக, லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

அவரது நியமனம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, ” என்று கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!