முக்கிய தருணத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கும் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் சந்தித்துப் பேச்சு நடத்தக் கூடும் என்று, ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

நான்காவது இந்திய பெருங்கடல் கருத்தரங்கு மாலைதீவில் செப்ரெம்பர், 3ஆம், 4ஆம் நாள்களில் நடைபெறவுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ளார்.

இந்தியா, சிங்கப்பூர், நேபாளம், பூட்டான், மொறிஷியஸ் போன்ற நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்தக் கருத்தரங்கில் மாலைதீவு அதிபர், சிறிலங்கா பிரதமர் மற்றும் 35 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

கருத்தரங்கின் பக்க நிகழ்வாக, சிறிலங்கா பிரதமரும், இந்திய வெளிவிவகார அமைச்சரும் சந்தித்துப் பேசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும், ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான கூட்டணி இன்னமும் அதிபர் வேட்பாளரை அறிவிக்கத் திணறி வரும் நிலையிலும் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!