சிறிலங்கா அதிபரின் உரை – மகிந்த அணி கொதிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பகிரங்க அறிவிப்பினால், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனுவுக்கும் இடையில் நடந்து வரும் பேச்சுக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்று எச்சரித்துள்ளார், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார.

நேற்றுமுன்தினம் நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது மாநாட்டில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, 2020இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியே ஆட்சியமைக்கும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வாசுதேவ நாணயக்கார,

“இரண்டு கட்சிகளினதும் வீழ்ச்சியினால் வெளியே உள்ளவர்கள் நன்மை பெற்று விடுவார்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சிறிலங்கா அதிபர் இரக்கமின்றி தாக்கிப் பேசியிருந்தார். ஆனால் அவர் அத்தகைய கருத்துக்களை கூறக்கூடாது.

2020 ஆம் ஆண்டில் நாங்கள் ஐதேகவை தோற்கடித்து எமது அரசாங்கத்தை அமைக்க முடியும்.

சுதந்திரக் கட்சி எங்களுடன் இணைந்தால், எமது வெற்றியும் ஐதேகவின் தோல்வியும் உறுதி செய்யப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!