அதிபர் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்ற கலைப்பு குறித்து முடிவு

19 ஆவது திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் சிறிலங்கா அதிபரிடம் இருந்து நீக்கப்பட்டிருப்பதால், இந்த ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படும் அதிபர் தேர்தல்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான எந்த முடிவும் சபை உறுப்பினர்களால் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஜேவிபி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

இன்று நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் உள்ளது. கடந்த காலங்களில் இந்த அதிகாரம் சிறிலங்கா அதிபரிடம் இருந்தது.

நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அது நாடாளுமன்றத்தின் உடன்பாட்டுடன் மட்டுமே செய்ய முடியும்.

அதிபர் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கலாமா வேண்டாமா என்பது குறித்த முடிவு, கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் நாடாளுமன்றம் முடிவு செய்ய வேண்டிய விடயமாகும்.” என்று தெரிவித்தார்.

தற்போதைய நாடாளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிக்காலம், கடந்த 2015 செப்ரெம்பர் 1ஆம் நாளில் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!