இது ‘ஐதேக’ பேரணி அல்ல!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்கத்தை பாதுகாக்க முடியாத நபர்களால் கட்சிக்கும் நாட்டிற்கும் எந்த நல்லதும் நடக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி இல்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியாக இருப்பின் அது கட்சியின் ஆசீர்வாதத்துடன் நடக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பிரபல உறுப்பினர்கள் சந்தித்தபோது ஒற்றுமையாகச் செயற்பட இணக்கப்பாட்டுக்கு வந்தபோதும் சிலர் கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!