“தமிழர்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கம் த.தே.கூ.வுக்கு கிடையாது”

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படாது, அரசியல் பழிவாங்கள்கலே இடம்பெற்றதாக எதிர்க்கட்சித தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதிக்கான குரல் அமைப்பின் மாநாடு இன்று பத்தரமுல்லையில் உள்ள ‘அபே கம’ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றத்தையே நாட்டு மக்கள் தற்போது எதிர்பார்த்து உள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கு கடந்த அரசாங்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது வடக்கில் பெயரளவிலே அபிவிருத்திகள் செயற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கிடையாது.

அவர்கள் கடந்த நான்கு வருட காலமாக அரசியலமைப்பு உருவாக்கம் என்ற விடயத்தை குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டு தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்துள்ளார்கள்.

ஆகவே அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசியல் பழிவாங்களுக்குட்பட்ட மக்களுக்கு எமது ஆட்சியில் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!