பொதுஜன பெரமுன- சுதந்திரக் கட்சி இடையே விரிசல் அதிகரிப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும், இருதரப்புக்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தலில் பொதுச் சின்னத்தில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டால் ஆதரவளிக்க முடியும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூறியுள்ளது.

எனினும், அந்த நிபந்தனையை ஏற்க முடியாது என பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, அதிபர் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்காக, தேர்தல் ஆணைக்குழுவிடம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி விருப்பம் வெளியிட்டுள்ளது.

இருதரப்பு பேச்சுக்கள் இழுபறிக்குள்ளாகியிருக்கும் நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாவிட்டாலும் தனித்தே போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என பொதுஜன பெரமுன தலைவர்கள் பலரும் கூறத் தொடங்கியுள்ளனர்.

தனித்துப் போட்டியிட்டார், சுதந்திரக் கட்சிக்கே பாதிப்பு என்றும் அவர்கள். எச்சரித்து வருகின்றனர்.

அதேவேளை, தமது ஆதரவின்றி எந்தக் கட்சியினாலும் 47 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற முடியாது என்று சுதந்திரக் கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!