பதவி காலம் தொடர்பில் ஜனாதிபதி வியாக்கியானம் கோருவது அவரது தனிப்பட்ட அரசியலுக்கு அழகல்ல – ஜி. எல். பீறிஸ்

?????????????????????????????????????????????????????????
பதவி காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் சட்ட வியாக்கியானம் கோருவது , ஜனாதிபதி பதவிக்கும், அவரது தனிப்பட்ட அரசியலுக்கும் அழகல்ல, என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு அறிவித்தல் அதிகாரம் தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு பொருப்பாக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பில் எந்நேரத்திலும் சாதாகமான தீர்மானங்களே கிடைக்கப் பெறும்.

ஆனால் ஒரு தரப்பினர் கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அனையனைத்தும் தற்போது தோல்வியடைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!