90 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் காருக்குள் ஓட்டுனர் தூக்கம்!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் நெடுஞ்சாலையில் சென்ற டெல்சா வாடகை காரில் ஓட்டுனர் மற்றும் காரில் பயணித்த வாடிக்கையாளர் ஆகிய இருவருமே ஆழ்ந்து தூங்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பதிவு செய்த டகோடா ராண்டல் ((Dakota Randall)) என்பவர் இச்சம்பவத்தைப் பற்றி குறிப்பிடும் போது, கார் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது ஓட்டுனர் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதாகவும், தமது காரில் இருந்து ஒலிஎழுப்பியும் அவர்களை எழுப்ப முடியவில்லை என்றும், கிடைத்த ஒரு நிமிட வாய்ப்பில் இந்த வீடியோவை பதிவு செய்ததாகவும் தெரிவித்தார். டிவிட்டரில் வெளியான உடனேயே 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதனைக் கண்டனர். அந்த கார் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!