பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்ய நால்வர் குழு

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமான வேட்பாளர் யார், கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தக் கூடியவர் யார் என்ற சமூக ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புகளை ஆய்வு செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நால்வர் குழுவை அமைத்துள்ளது.

சஜித் பிரேமதாச தரப்பில் இருந்து மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் காசிம் ஆகியோரும், ரணில் விக்ரமசிங்க தரப்பில் இருந்து ராஜித சேனாரத்ன மற்றும் தினேஸ் வீரக்கொடி ஆகியோரும், இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் அண்மையில் நடந்த கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட அறிக்கைகளை இந்த குழு ஆய்வு செய்யவுள்ளது.

இந்தக் குழு தமது ஆய்வுகளின் முடிவுகளை, ரணில்- சஜித் இடையே நடக்கும் அடுத்த கூட்டத்தில் முன்வைக்கவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!