அமெரிக்கா- சீனா இடையில் தான் போட்டி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான போட்டியாக அமையப் போவதில்லை, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டியாகவே இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னரே அவ்விரு நாடுகளும் எமது தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பிரஜைகள் என்ற வகையில் நாங்கள் இன்னும் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராகவில்லை. இன்னும் வேட்பாளர்களை அடையாளம் காணமுடியவில்லை தானே. இன்னும் தெரிவு செய்துதான் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் சீனாவும், அமெரிக்காவும் இந்த ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே ஆரம்பித்து விட்டன. அவர்களுடைய தலையீட்டின் அளவு என்ன என்பதையும், அதனூடாக பெறப்படுகின்ற பிரதிபலனுக்கு உரிமை கொண்டாட முடியும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

அதனூடாக இந்த நாட்டை அடிமைகளின் தீவுகளாக மாற்றியமைக்க முடியும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். ஆகவே இந்த ஜனாதிபதி தேர்தல் போட்டியானது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் போட்டியல்ல என அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!