கோத்தாபயவை கைது செய்ய அரசாங்கம் சூழ்ச்சி : மஹிந்த ராஜபக்ஷ

நாட்டுக்காக சேவையாற்றுவதை விடுத்து அரசாங்கம் அரசியல் பழிவாங்களுக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்தது.

இன்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய பல சூழ்ச்சிகள் வகுக்கப்படுகின்றது.

எவ்வழியில் முயற்சித்தாலும் ஐக்கிய தேசிய கட்சியால் எதிரணினை ஒருபோதும் வீழத்த முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ

நன்னீர் மீன்பிடி தொழிலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ பல தடைகளை விதித்தார். இலங்கை- இந்நிய கடல் எல்லையில் இரு நாட்டு மீனவர்கள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மீனவ குடும்ப உறுப்பினர்களின் இணையனுசரனையுடனான தேசிய மாநாடு இன்று கொழும்பில் உள்ள கண்காட்சி மற்றும் காட்சிப்படுத்தல் அரங்கில் இடம் பெற்றது. அங்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடற்தொழிலை கட்டியெழுப்புவதற்கு கடந்த அரசாங்கத்தினால் பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. மீனவ குடும்பத்திரனது அடிப்படை தேவைகள் குறுகிய காலத்தில் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டது.

மீனவர்களுக்கான காப்புறுதிகளும் வழங்கப்பட்டன. 1994. ஒக்டோபர் மாதம் 01ம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது. இவ்வர்த்தமானியில் கடற்தொழிலாளர்களின் நலன் பேணும் திட்டங்கள் அனைத்தும் கடற்தொழில் கூட்டுத்தாபனத்திற்கு பொறுப்பாக்கப்பட்டது.

நன்னீர் மீன்பிடி தொழிலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ பல தடைகளை விதித்தார். அரசியல் தேவைகளை கருத்திற்கொண்டு தேசிய உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.ஆனால் எமது ஆட்சியில் நன்னீர் மீன்பிடியில் பல புதிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வெற்றியும் அடைந்தது.

கடந்த அரசாங்கத்தை விமர்சித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அரசியல் பழிவாங்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது என அவர் இதன்போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!