புதிய போத்தலில் வருகிறது, பழைய வைன்: சஜித்தினால் மக்களை கவர முடியாது என்கிறார் டிலான்

பழைய வைனை புதிய போத்தலில் போட்டுத்தருவதைப் போன்றே சஜித் தேர்தலில் போட்டியி டுகின்றார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் வேட்பாளர் எனின் சஜித்தினால் மக்களை கவர முடியாது

என்று எதிரணி யின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரெரா தெரிவித்தார். அத்துடன் சுமந்திரனும் சம்பந்தனும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தாலும் முழுமையான கூட்டமைப்பின் முடிவாக அது அமையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ளமை மற்றும் ஜனாதிபதி தேர்தல் தேர்தல் செயற்பாடுகள் என்பன குறித்து விபரிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.

அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தான் புதிய பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச கூறுகிறார். ஆனால் அவரினால் புதிய பயணத்தை மேற்கொள்ள முடியாது. காரணம் அவர் ரணில் விக்ரமசிங்கவே பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி யானை சின்னத்தில் போட்டியிடாமல் அன்னம் சின்னத்திலேயே போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விடயங்களையும் பார்க்கும்போதே சஜித் புதிய . பயணத்தை முன்னெடுத்துள்ளதாக கூற முடியாது. இங்கு பழைய வைனை புதிய போத்தலில் போட்டுத் தருவதைப் போன்றே சஜித் தேர்தலில் போட்டியிடுகின்றார். காரணம் ரணில் விக்ரமசிங்க பிரதமர் வேட்பாளர் என்றால் அதற்கு அப்பால் எதனையும் கூறவேண்டிய அவசியமில்லை.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் என்று தெரிகின்றது. ஆனால் அது ஒட்டுமொத்த கூட்டமைப்பின் முடிவாக இருக்காது. சுமந்திரனும் சம்பந்தனும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தாலும் முழுமையான கூட்டமைப்பின் முடிவாக அது அமையாது.

சஜித் பிரேமதாசவினால் அரசியல் தீர்வை வழங்க முடியும் என்று கூற முடியாது. கூட்டமைப்பினருடன் ரணில் விக்ரமசிங்க பாரிய நெருக்கத்துடன் இருந்தார். அவ்வாறு இருந்தும் அவரினால் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க முடியவில்லை. அவ்வாறு இருக்கும்போது சஜித்தினால் வழங்க முடியும் என்று நம்ப முடியாது.

அண்மையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றியமைக்கும் யோசனைக்கு சஜித் அணி எதிர்ப்பு தெரிவித்தது. அது தொடர்பில் கூட்டமைப்பினர் விசனம் வெ ளியிட்டிருந்தனர். ஆனால் மறுபுறம் எமது வேட்பாளர் கோத்தாபய ராஜகபக்ஷ சிறப்பான முறையில் மக்கள் ஆதரவை பெற்றுவருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!