ஐ.தே.க.வின் கடிதம் குறித்து மத்திய குழு கூட்டத்தில் ஆராயப்படும் – சு.க.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐ.தே.கவினால் கலந்துரையாடலுக்கு அழைத்து சுதந்திர கட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் நாளைமறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள மத்திய குழு கூட்டத்தில் ஆராயப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வேண்டுகோளுக்கு அமையவே அன்றைய தினம் ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வதந்திகள் பரப்பப்படுகின்றன.

பொதுஜன பெரமுனவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. நாளைமறுதினம் சு.கவின் மத்திய குழு கூடவிருப்பதால் அதற்கு முன்னர் சின்னம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு தீர்வு காணப்பட்டால் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து வெற்றிகரமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறில்லை என்றால் மாற்று வழி குறித்து சிந்திப்போம். எவ்வாறிருப்பினும் முடிந்த வரை வெற்றிகரமாக கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்றே எதிர்பார்ப்பதாகவும் கூறினா.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!