ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம்!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று 56 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத் தயாரிப்புகள் அவ்வப்போது வழக்குகளில் சிக்கி வருகின்றன. அந்த வகையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத் தயாரிப்பான ரிஸ்பெரிடால் என்ற மருந்து மன அழுத்தம், மன இறுக்கம் உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தின் பக்க விளைவாக தனது உடலில் மாற்றம் ஏற்பட்டதாக நிகோல முர்ரே என்பவர் பிலடெல்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. ஆனால் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், ரிஸ்பெரிடால் மருந்து தொடர்பான தங்கள் தரப்பு ஆதாரங்களை நிதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!