தமிழ்க் கட்சிகளின் நிபந்தனைகளை கோத்தா ஏற்கமாட்டார்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஹொரணையில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் முழுமையான கவனம் செலுத்தி வருகின்றது. ஐந்து பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றினைந்து 13 பிரதான நிபந்தனைகளை உள்ளடக்கிய கோவையினை உருவாக்கியுள்ளார்கள்.

இந்த நிபந்தனைகள் தொடர்பில் பிரதான 3 ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் பேச்சுவார்த்தைகளை விரைவாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இக்கோரிக்கைகள் தொடர்பில் ஒருபோதும் கவனம் செலுத்த மாட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!