சொத்துகளின் விபரங்களை வெளியிடாத 6 வேட்பாளர்கள்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், 35 வேட்பாளர்களில் ஆறு வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவி்ன் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

”தேர்தல்கள் சட்டத்தின்படி, அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது சொத்துக்களின் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

எனினும், இம்முறை அதிபர் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களில் 6 பேர் சொத்து விபரங்களை வெளியிடவில்லை.

சொத்து விபரங்களை வெளியிடாத வேட்பாளர்களில் ஐவர், சுயேட்சைகள், ஒருவர் அரசியல் கட்சியின் வேட்பாளர்.

சொத்துக்களின் விபரங்களை வெளிப்படுத்தாத வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழக்குத் தொடரமுடியும் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!