கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ: 10,000 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயால், ஜீயர்ஸ்வில்லி பகுதியிலுள்ள மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒயின் நகரம் என அழைக்கப்படும் சோனாமா கவுண்டியிலுள்ள இப்பகுதியானது காட்டுத் தீயில் சிக்கி தவித்து வருகிறது. இதுவரை சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. ஏராளமான மரங்கள் எரிந்து கருகின.

தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீயை அணைக்க முயற்சித்தும் காற்று வேகமாக வீசுவதால், பல்வேறு பகுதிகளுக்கும் தீ பரவி வருகிறது. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஜீயர்ஸ்வில்லி பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!