தப்பிச் சென்­றவர் விவா­தத்தை தவிர்ப்­பது ஆச்­ச­ரி­ய­மா­ன­தல்ல – கோத்தாவின் விவகாரம் தொடர்பில் மங்கள

ஆனை­யி­றவு நட­வ­டிக்­கை­யின்­போது நாட்­டி­லி­ருந்து தப்பிச் சென்ற கோத்­தாபய ராஜ­பக் ஷ நேரடி விவா­தத்தை தவிர்ப்­பது ஒன்றும் ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரிய விட­ய­மல்ல. பயம் என்­பது அவ­ரது ஒரு வழ­மை­யான விட­ய­மாகும் என்று நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக நேற்று டுவிட்டர் பதிவு ஒன்றை இட்­டுள்ள மங்­கள சம­ர­வீர இதனை குறிப்­பிட்­டுள்ளார்.

அமைச்சர் மங்­கள சம­ர­வீரவின் டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஆனை­யி­றவு நட­வ­டிக்கை – 1 ஐ புலி­களின் தலைவர் பிர­பா­கரன் யுத்­தத்தின் முக்­கிய புள்­ளி­யாக பார்த்தார். ஆனால் அந்த ஆனை­யி­றவு நட­வ­டிக்கை – 1 ஆரம்­பிக்­கப்­பட்டு ஒரு வாரத்தில் கோத்­த­பாய நாட்­டி­லி­ருந்து தப்பிச் சென்றார். எனவே கோத்தா தற்­போது நேரடி விவா­தத்தை தவிர்ப்­பா­னது ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரி­ய­தல்ல. காரணம் பயம் என்­பது அவ­ரது ஒரு வழ­மை­யான விட­ய­மாகும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டை முன்­னேற்­று­வ­தற்­கான கொள்­கைகள் குறித்து விவா­திக்க நேரடி விவாதம் ஒன்­றுக்கு வரு­மாறு எதி­ரணி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆளும் கட்சி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார். அதற்கு எதிரணி தரப்பிடமிருந்து இன்னும் பதில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!