கடந்தமுறை தவறு செய்த தமிழர்கள் – குற்றம்சாட்டிய மகிந்த

தமிழ் மக்கள் கடந்தமுறை தவறு செய்து விட்டார்கள் என்று குற்றம்சாட்டிய பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தமுறை அவ்வாறான தவறைச் செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வவுனியாவில் நேற்று நடந்த பொதுஜன பெரமுனவின் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

“மக்களுக்கு சேவையாற்றியவரையேஅதிபர் வேட்பாளராக களமிறக்கியுள்ளேன்.

சிறந்த பலமான அரசாங்கத்தை தோற்றுவிக்க அனைவரும் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த ஒன்றிணைய வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவை அதிபராக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

காணிப் பிரச்சினைக்கு தீர்வு, காணாமல்போனோரது உறவுகளுக்கு நட்டஈடு மற்றும் வடக்கிற்கு முழுமையான அபிவிருத்தி எம்மால் துரிதமாக செயற்படுத்தப்படும்.

தமிழ் மக்கள் மீண்டும் அரசியல் ரீதியில், தவறான முடிவை எடுக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த அதிபர் தேர்தலில் தமிழ் மக்களால் தாம் தோற்கடிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியே, மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!