காதலியின் தொடர் வசவுகளால் தற்கொலை செய்து கொண்ட காதலன்!

அமெரிக்காவில் தனது காதலன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பாஸ்டன் கல்லூரியின் மாணவி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்யங்க் யூ என்ற அந்த 21 வயது பெண் மீது அலெக்சாண்டர் உர்டுலா என்ற 22 வயது இளைஞரின் மரணம் தொடர்பாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தென் கொரியாவை பூர்வீகமாக கொண்ட இன்யங்க் யூ , உர்டுலாவை தொடர்ந்து கடுமையான வார்த்தைகளால் வசைபாடி கொண்டிருந்ததாக உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். தனது பட்டக்கல்வியை நிறைவு செய்வதற்கு முன்பு கடந்த ஜூன் மாதத்தில் அலெக்சாண்டர் உர்டுலா தற்கொலை செய்து கொண்டார்.

அலெக்சாண்டர் உர்டுலா தற்கொலை செய்து கொள்வதற்கு 2 மாதங்களுக்கு முன்னர், இவ்விருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 75,000க்கும் மேற்பட்ட குறுந்தகவல் பரிமாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது. இன்யங்க் யூ அடிக்கடி உர்டுலாவை திட்டிக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் , ‘நீ செத்து போய்விடு’ , ‘தற்கொலை செய்துகொள்’ போன்ற வாசகங்களை அவர் உர்டுலாவுக்கு அனுப்பியதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!