ஜனாதிபதிக்கு விக்கி அவசர கடிதம்!

தமிழ் அரசியல் கைதிகளை வரும் பௌர்ணமி தினத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

தான் பதவிக்கு வந்தால் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை செய்வதாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதையும் அவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அவர் செய்வதாக கூறும் விடயத்தை ஜனாதிபதியாகிய உங்களால் தற்போது செய்து முடிக்க முடியும் எனவும் அதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்கள் எதிர்ப்பை தெரிவிக்கமாட்டார்கள் எனவும் ஆகவே எதிர்வரும் பௌர்ணமி தினத்திற்குள் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறும் அவர் ஜனாதிபதியை கேட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வழங்கிய ஏகோபித்த வாக்குகளுக்கு கைமாறாக தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்வதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!