கோத்தா வென்­றதும் மஹிந்த பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­டுவார்: 120 பேருடன் அரசாங்கம் அமையும் – அம­ர­வீர

தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் அரச ஊழி­யர்­க­ளுக்கு எந்­த­வித நலனும் பெற்றுக்கொடுக்­கப்­பட வில்லை. புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் அரச ஊழி­யர்கள் தொடர்பில் எந்­த­வி­த­மான சிறந்த வேலைத்­திட்­டமும் உள்­ள­டக்­கப்­பட வில்லை. ஆனால் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அரச ஊழி­யர்­க­ளுக்கு பல சிறந்த கொள்­கைத்­திட்­டங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

கோத்­தா­ப­யவின் வெற்றி அறி­விப்பை தொடர்ந்து மஹிந்த ராஜ­பக்ஷ பிர­த­ம­ராக அறி­விக்­கப்­ப­டுவார். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்­றி­ய­றி­விப்பை தொடர்ந்து பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­விக்­கப்­பட்­டாரை். .அதே போல் தான் மஹிந்த பிர­த­ம­ராக அறி­விக்­கப்­பட்டு அத­ன­டிப்­ப­டை­யிலே எமது நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இரா­ஜ­கி­ரி­யவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி – பொது­ஜன பெர­மு­னவின் ஒன்­றி­ணைந்த ஊடக சந்­திப்பு மத்­திய நிலை­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்­றது. இதில் இவ்­வாறு தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,

நாட்டின் சில பகு­திகள் தற்­போது வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. முக்­கி­ய­மாக தென்­மா­கா­ணத்தில் பல பகு­தி­களில் ஏற்­பட்­டுள்ள வெள்ளம் கார­ண­மாக மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் மக்­க­ளுக்­கான உத­வி­களை செய்து கொடுப்­ப­தற்­காக நாம் பல ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்ளோம்.தேர்தல் சட்­டத்­திட்­டங்­களை மீறாத வகையில் ஜனா­தி­ப­தி­யினால் இந்த நிவா­ரண நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். இதன்­போது பாதிக்­கப்­பட்ட பிர­தேச செய­ல­கத்­திற்கு 10 இலட்சம் ரூபாய் நிதி வழங்­கப்­ப­டு­வ­துடன் , அவர்கள் அந்த பகு­தி­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அந்த பணத்தை பகிர்ந்­த­ளிக்க நட­வ­டிக்கை எடுப்­பார்கள்.

தபால்­மூல வாக்­கெ­டுப்பு இடம்­பெ­ற­வுள்­ளன. இந்­நி­லையில் தபால் மூல வாக்­க­ளிப்பில் கலந்­துக்­கொள்ளும் அரச ஊழி­யர்கள் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் ,அவர்­களின் கொள்கை திட்­டங்கள் தொடர்பில் நன்கு சிந்­தித்து வாக்­க­ளிக்க வேண்டும். தற்­போ­தைய அர­சாங்­கத்தின் ஆட்­சி­கா­லத்­தியே அரச ஊழி­யர்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­ட­துடன் , அவர்­களின் நல­னுக்­காக எந்­த­வித சிறப்­பான வேலைத்­திட்­டமும் முன்­னெ­டுக்­கப்­பட வில்லை. ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித்தின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் அரச ஊழி­யர்­க­ளுக்கு என்று பெரி­தாக ஒன்றும் உள்­ள­டக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை

எமது வேட்­பாளர் கோத்­தா­ப­யவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அரச ஊழி­யர்­க­ளுக்கு பயன்­த­ரக்­கூ­டிய பல திட்­டங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. அவர் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்கும் பட்­சத்தில் அரச ஊழி­யர்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­படும். இரா­ணுவம் மற்றும் பொலி­ஸா­ருக்கு இந்த அர­சாங்கம் எந்­த­வித முன்­னு­ரி­மையும் வழங்க வில்லை. ஆனால் கோத்­தா­பய அவர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்து செயற்­ப­டுவார். அவர்­க­ளுக்­கான பதவி உயர்­வுகள் , சம்­பள அதி­க­ரிப்­புகள் மற்றும் கொடுப்­ப­ன­வு­களை உரி­ய­மு­றையில் பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்கை எடுப்பார்.

சஜித் வெற்றி பெற்றால் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவை பாது­காப்­புக்கு பொறுப்­பாக நிய­மிப்­ப­தாக அறி­வித்­துள்ளார். ஆனால் சரத் பொன்­சேகா அவ­ரது பத­விக்­கா­லத்தின் போது பொலி­ஸா­ருடன் எவ்­வா­றான உறவை பேணினார் என்­பது அனை­வரும் அறிந்­த­வி­ட­ய­மாகும். அவ்­வாறு அவர் பத­வி­வ­கிக்க நேரிட்டால் அதன்­போது அவர் எவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்பார் என்­பது தொடர்­பிலும் அனை­வ­ருக்கும் தெரியும். பொன்­சேகா தற்­போது இரா­ணுவ வீரர் போல் அல்­லாது கோமா­ளியை போன்றே செயற்­ப­டு­கிறார்.

தற்­போ­தைய அர­சாங்­கத்தில் இடம்­பெற்ற மத்­திய வங்கி பிணை­முறி மோச­டிகள் கார­ண­மா­கவே நாட்டில் பாரிய பொரு­ளா­தார இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. இன்று சஜித்தின் பின்னால் இருப்­ப­வர்கள் யார் ? இவர்­கள்தான் இந்த மோச­டி­களில் ஈடுப்­பட்­டுள்­ளார்கள். அந்த மோச­டி­யுடன் தொடர்பு கொண்­டுள்ள அனை­வ­ரையும் சட்­டத்தின் முன் கொண்­டு­வர எமது வேட்­பாளர் கோத்­தா­பய நட­வ­டிக்கை எடுப்பார். எமது வேட்­பா­ளரின் பின்னால் எந்த மோச­டி­கா­ரர்­களும் இல்லை.

கோத்­தா­ப­யவை எல்­லோரும் இரா­ணு­வத்தில் கட­மை­பு­ரிந்­த­வ­ரா­கவே பார்­கின்­றனர். ஆனால் அவ­ரிடம் சிறந்த தலை­மைத்­துவ பண்பு மற்றும் அர­சியல் கொள்­ளை­களும் இருக்­கின்­றன. எதிர்­கா­லத்தில் அவர் சிறந்த அர­சியல் தலை­வ­ராக விளங்­குவார் என்­பதே எமது எண்ணம்.

கேள்வி: கோத்­தா­பய வெற்றி பெற்­ற­பின்னர் பாரா­ளு­மன்றம் உடனே கலைக்­கப்­பட மாட்­டாதே, அதனால் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வீர்­களா?

பதில்: இல்லை, அவர்­க­ளது கொள்­கை­க­ளுக்கும் , எமது கொள்­கை­க­ளுக்கும் பாரிய வேறு­பா­டுகள் உண்டு அதனால் எமக்கு அவர்­க­ளுடன் இணைந்து செயற்­பட முடி­யாது. கோத்­தா­ப­யவின் வெற்றி அறி­விப்பை தொடர்ந்து மஹிந்த ராஜ­பக்ஷ பிர­த­ம­ராக அறி­விக்­கப்­ப­டுவார். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்­றி­ய­றி­விப்பை தொடர்ந்து பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­விக்­கப்­பட்­டாரை். .அதே போல் தான் மஹிந்த பிர­த­ம­ராக அறி­விக்­கப்­பட்டு அத­ன­டிப்­ப­டை­யிலே எமது நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

கேள்வி: உங்­களால் 113 பாரா­ளு­மன்­றத்­தி­லங 113 உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வினை திரட்ட முடி­யுமா?

பதில்: கோத்­தாவின் வெற்­றியை தொடர்ந்து 120 உறுப்­பி­னர்­க­ளுடன் நாங்கள் வெற்­றி­க­ர­மாக ஆட்­சி­ய­மைப்போம்.

கேள்வி : உங்கள் கூட்­ட­ணியில் எந்­தனை கட்­சிகள் உள்­ள­டங்­கு­கின்­றன?

பதில்: ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன , ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உட்­பட 15 கட்­சிகள் உள்­ள­டங்­கி­யுள்­ளன. ஸ்ரீலங்கா சுதந்­திர பொது­ஜன கூட்­ட­மைப்பு என்ற பெய­ரிலே எமது கூட்­டணி அமையும்.

கேள்வி: கோத்­தா­ப­யவின் ஆட்சி காலத்தில் பொலி­ஸா­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தாக தெரி­வித்­தீர்கள், ஆனால் பெருந்­தொ­கை­யான பொலி­ஸாரின் உயி­ரி­ழப்­பிற்கு கார­ண­மான கரு­ணா­அம்­மானை இணைத்துக் கொண்­டுள்­ளீர்­களே?

பதில்: ஆம் அவர் அவ்­வாறு முன்னர் செயற்­பட்­டி­ருந்­தாலும்,புனர்­வாழ்வு பெற்று வரும் போது அவரை இணைத்துக் கொள்­வதில் எந்த பிரச்­சி­னையும் இல்­லையே. குற்­ற­வா­ளி­க­ளுக்கு திருந்த சந்­தர்ப்பம் வழங்­கு­வ­து­போன்று,இவர்கள் திருந்தி வந்­ததின் பின்னர் அவர்­களை இணைத்துக் கொண்டு செயற்­ப­டு­வதில் எந்த தவறும் இல்லை. விடு­தலை புலியைச் சேர்ந்த எந்­த­னையோ பேர் புனர்வாழ்வு பெற்று சிவில் பாதுகாப்பு பிரிவில் இணைந்துக் கொண்டுள்ளனர். திருந்தி வருபவர்களை இணைத்து செயற்படுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாதே.

கேள்வி: அர்ஜூனா மகேந்திரனை நாடுகடத்துவது தொடர்பில் பேசப்பட்டு வந்த போதும் , தற்போது அதில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது போல்தோன்றுகின்றதே?

பதில்: இல்லை அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று அல்லது நாளை கூட அவர் அழைத்துவரப்படலாம். தேர்தல் காலத்தில் நாடுகடுத்தப்பட்டால் தேர்தலின் போது வாக்குளை பெறுவதற்காக அழைத்து வந்துள்ளார்கள் என்று தெரிவிப்பார்கள். ஆனால் உடனடியாக அவரை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றனார். வெகுவிரைவில் அவர் நாடுகடத்தப்பட்டு மத்திய வங்கி பிணைமுறி மோசடிகளுடன் தொடர்புடைய அனைவரும் கண்டறியப்படுவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!