இரணைதீவில் வாக்களிப்பு நிலையம் இல்லை!

கிளிநொச்சி – இரணைதீவில் மீளக் குடியேறிய மக்ககளுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி குறித்த பகுதியில் குடியேறியிருந்த மக்கள் முதன்முறையாக இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருந்தனர்.

இருப்பினும் தங்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுவிக்கவில்லை என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இரணைமாதா நகருக்கு சென்றே வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளபோதும் அவர்களுக்கான படகு வசதிகளோ வேறு எந்த வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.

யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் இரணைதீவு பகுதியில் வாக்களிப்பு நடைபெற்றது. குறிப்பாக கடந்த காலங்களில் வானூர்தியில், படகுகளில் வாக்களிப்பு பெட்டிகள் கொண்டு வரப்பட்டு தேர்தல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!