வீரர்­கள் திரு­டர்­க­ளா­க­வும், திரு­டர்­கள் வீரர்­க­ளா­க­வும் மாறி­யுள்­ள­னர்! – அர்­ஜூன ரண­துங்க

கடந்த அர­சின் ஊழல்­வா­தி­க­ளை­யும், திரு­டர்­க­ளை­யும் பிடிக்­கத் தவ­றி­ய­தால், தற்­போது வீரர்­கள் திரு­டர்­க­ளா­க­வும், திரு­டர்­கள் வீரர்­க­ளா­க­வும் மாறி­யுள்­ள­னர் என்று விசனம் தெரிவித்துள்ளார் பெற்­றோ­லிய வளங்­கள் அபி­வி­ருத்தி அமைச்­சர் அர்­ஜூன ரண­துங்க.

நேற்­று கட­வத்­தை­யில் நடந்த நிகழ்­வொன்­றில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். “திரு­டர்­க­ளைப் பிடிப்­போம் என்று பிரதமரும், ஜனாதிபதியும் வழங்­கிய வாக்­கு­று­தியை இன்­று­வரை நிறை­வேற்­ற­வில்லை. திரு­டர்­க­ளைப் பிடிக்­கவே மக்­கள் அவர்களுக்கு அதி­கா­ரத்தை வழங்­கி­னர். ஆனால் அதை நிறை­வேற்­ற­வில்லை. இது நாட்­டுக்­குத் துர­திர்ஸ்­டமே. அத­னால் இன்று திரு­டர்­கள் வீரர்­க­ளா­க­வும், வீரர்­கள் திரு­டர்­க­ளா­க­வும் உள்­ள­னர். கடந்த அர­சில் ஊழ­லில் ஈடு­பட்­ட­வர்­கள் இன்று சுதந்­தி­ர­மாக உள்­ள­னர். மூன்­றரை ஆண்­டு­கள் கடந்­துள்ள நிலை­யில் எம்­மால் இன்­ன­மும் கடந்த காலத் திரு­டர்­க­ளைப் பிடிக்க முடி­யா­துள்­ளது.

ஒரு பக்­கம் கவ­லை­யாக இருந்­தா­லும் மறு­பக்­கம் மகிழ்ச்­சி­யாக உள்­ளது. கார­ணம் தற்­போ­தைய அர­சில் உள்ள திரு­டர்­க­ளை­யா­வது பிடிக்க முடிந்­துள்­ளது. அர்­ஜூன் அலோ­சி­ய­சி­டம் பணம் பெற்ற 118 பேரின் பெயர்­க­ளைக் கட்­டா­யம் மக்­கள் முன் வெளிக்­கொ­ணர வேண்­டும். கூச்­ச­லிட்ட சில­ரின் உண்­மை­யான முகங்­கள் இப்­போது வெளி­வந்­துள்­ளன.

20 ஆவது திருத்­தம் தொடர்­பில் இப்­போது சரி­யான முடிவை எடுக்க முடி­யாது. மக்­கள் விரும்­பும் அர­ச­மைப்பே நாட்­டுக்கு அவ­சி­யம். நான் நிறை­வேற்று அதி­கார ஜனாதிபதி முறை­மைக்கு எதி­ரா­ன­வன் அல்ல. நிறை­வேற்று அதி­கார ஜனாதிபதி முறை­மை­யில் சாத­கங்­க­ளும் உண்டு, பாத­கங்­க­ளும் உண்டு. ஒரு­வர் அந்­தப் பத­வி­யில் அம­ரும்­ போது அதி­கா­ரங்­க­ளைத் தவ­றா­க­வும் பயன்­ப­டுத்­த­லாம், சரி­யா­க­வும் பயன்­ப­டுத்­த­லாம். எனி­னும் நாட்­டின் பாது­காப்­புக்கு நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனாதிபதி முறை­யையே அவ­சி­ய­மா­கும்.என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!