பறிக்கப்படும் கடல் வளம், புலனாய்வாய்வாளர்களால் அச்சுறுத்தல்! – வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கவலை

வெளி மாவட்ட மீன­வர்­கள் இங்கு கட­லட்டை தொழில் செய் வ­தற்கு அனு­ம­திக்க மாட்­டோம். எம்மை இரா­ணு­வப் புல­னாய் வா­ளர்­கள் தொலை­பே­சி­யூ­டாக அச்­சு­றுத்­து­கின்­ற­னர். நாம் அதற்­குப் பயந்­து­விட மாட்­டாம். தொடர்ச்­சி­யாக எதிர்ப்­போம் என்­று வட­ம­ராட்சி கிழக்­கிலுள்ள உள்­ளூர் தெரி­வித்­த­னர்.

வட­ம­ராட்சி கிழக்­குக் கடற்­ப­ரப்­பில் அண்­மைக்­கா­ல­மாக ஏற்­பட்­டுள்ள கட­லட்­டைத் தொழில் பிரச்­சினை தொடர்­பான அவ­சர கலந்­து­ரை­யா­டல் ஒன்று நேற்று வட­ம­ராட்சி கிழக்­குப் பிர­தேச செய­ல­கத்­தில் செய­லர் தலை­மை­யில் இடம்­பெற்­றது. அதில் இந்த விட­யங்­களை மீன­வர்­கள் சுட்­டிக்­காட்­டி­னர்.

வெளி­இ­டங்­க­ளைச் சேர்ந்த மீன­வர்­கள் வட­ம­ராட்­சிக் கட­லில் கட­லட்­டைத் தொழில் ஈடு­ப­டு­கின்­ற­னர் என்ற குற்­றச்­சாட்டு உள்­ளூர் மீன­வர்­க­ளால் தொடர்ந்து முன்­வைக்­கப்­பட்டு வரு­கி­றது. வெளி­மா­வட்­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் கடற்­க­ரை­யில் வாடி­களை அமைத்­துத் தொழி­லில் ஈடு­ப­டு­கின்­ற­னர். அதற்கு உள்­ளூர் மீன­வர்­கள் கடும் எதிர்ப்பு வெளி­யிட்டு வரு­கின்­ற­னர்.

இது தொடர்­பில் பருத்­தித்­து­றைப் பிர­தேச சபை அமர்­வி­லும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. எமது கடல் பகு­தி­யில் கட­லட்­டையை சட்­ட­வி­ரோ­த­மா­கப் பிடிக்­கின்­ற­னர். இது தொடர்­பாக சபைத் தலை­வர் தலை­மை­யில் அண்­மை­யில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. இது தொடர்­பில் எமது சபை நட­வ­டிக்­கை­யைத் தொடர வேண்­டும் என்று பிர­தேச சபை உறுப்பினர் சுரேஷ்­கு­மார் கோரி­யி­ருந்­தார்.

கற்­கோ­வ­ளம் கடற்­ப­கு­தி­யி­லும் கட­லட்டை பிடிக்­கப்­ப­டு­கின்­றது. புத்­த­ளம் , கற்­பிட்டி, சிபத்­தைச் சேர்ந்­த­வர்­கள் இந்­தத் தொழி­லில் ஈடு­பட்டு எங்­கள் கடல் வளத்­தைச் சுரண்­டு­கின்­றார்­கள். எம்­ம­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­ப­டு­கின்­றது. இதைக் கண்­டித்­துத் தீர்­மா­னம் நிறை­வேற்­ற­ப­வேண்­டும் என்று பிர­தேச உறுப்­பி­னர் த.சந்­தி­ர­தாஸ் கோரிக்­கை­யி­ருந்­தார்.

இந்­தப் பிரச்­சினை தொடர்­பில் மரு­தங்­கே­ணிப் பிர­தேச செய­லர் ஆராய்­வார் என்று பிர­தேச சபைத் தலை­வர் அமர்­வில் தெரி­வித்­தி­ருந்­தார். நேற்று இது தொடர்­பா­கக் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

“கடல் வளம் அழி­கின்­றது, கலா­சா­ரச் சீர்­கே­டு­கள், இனப்­ப­ரம்­பலை மாற்­றி­ய­மைத்­தல், சுகா­தா­ரச் சீர்­கே­டு­களை ஏற்­ப­டுத்­தல் எனத் தொடர்ச்­சி­யா­கப் பாத­க­மான செயற்­பா­டு­கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இது பிர­தே­சத்­தின் பிரச்­சினை அல்ல. எமது இனத்­தின் பிரச்­சினை. பிர­தே­ச­சபை, மாவட்­டச் செய­லர், வடக்கு மாகாண சபை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் விரைந்து நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும். கடற்­க­ரை­யா­னது அலங்­கோ­ல­மா­கிச் சூறை­யா­டப்­பட்டு அழி­வ­டை­கின்ற நிலைக்கு வந்­துள்­ளது. எமது சொத்தை தொடர்ந்து அழி­வ­டை­யும் நிலைக்­குக் கொண்டு செல்­ல­வி­ட­மாட்­டோம்.”- என்று உள்­ளூர் மீன­வர்­கள் தெரி­வித்­த­னர்.

இந்­தப் பிரச்­சினை தொடர்­பில் வியா­ழக்­கி­ழமை மரு­தங்­கேணி கடற்­றொ­ழி­லா­ளர் கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளின் சமா­சத்­தில் கலந்­து­ரை­யா­டல் ஒன்று இடம்­பெ­ற­வுள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!