ஷானி இடமாற்றம் அரசியல் உள்நோக்கம் கொண்டது! – சுமந்திரன்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகரவின் இடமாற்றம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலிகொட, கீத் நோயர் உட்பட ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யபபட்டது, கடத்தப்பட்டது, காணாமல் போகச்செய்யப்பட்டது போன்ற வழக்கு விசாரணைகளை துரிதமாக அணுகி வந்தவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகர. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, ஷானி அபேசேகர இடமாற்றம் செய்யப்பட்டார்.

இது குறித்து எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டவர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல விசாரணைகள் ஷானி அபேசேகரவினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து, அதன் பணிப்பாளரான ஷானி அபேசேகர இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதான எதிர்த்தரப்பான ஐக்கிய தேசியக் கட்சி எங்கு சென்றுள்ளது” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!