இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

நாட்டின் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம் தற்போதைய அரசாங்கத்துக்குக் கிடையாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மிகிந்தலை ரஜமகா விகாரையில், நேற்று வழிபாடு செய்த பின்னர், கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

”நாட்டின் தற்போதைய நிர்வாகம், ஜனநாயகத்தை மதித்து, காப்பாற்றும்.

இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் புதிய அரசாங்கத்துக்குக் கிடையாது.

கடைசிக் கட்டமாகவே, இராணுவத்தை நிறுத்துவது பற்றிய முடிவு எடுக்கப்படும்.

எந்த நிலைமைகளையும் சமாளிப்பதற்குத் தேவையான உத்தரவுகள் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளன.

அரசியல் காரணங்களால் எந்தவிதமான மோதல்களும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்துமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!