முகம் பார்க்காமல் 8 வருடங்களாக காதலித்த இளம்பெண்: கடைசியில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…?

8 வருடங்களில் தன்னுடைய காதலனின் முகத்தை ஒருமுறை கூட பார்க்காமல் சீனாவை சேர்ந்த இளம்பெண் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்துள்ளார்.

சீனாவை சேர்ந்த யி யி (32) என்கிற பெண் கடந்த மாதம் தனது காதலன் பணம் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்ற முயற்சிப்பதாக கூறி பொலிஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.நான் ஏ ஃபெங் என்கிற கப்பல் மாலுமியை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறேன். 8 வருடங்களில் ஒருமுறை கூட அவரது முகத்தை பார்த்ததில்லை.அவரது வேலைப்பளுவின் காரணமாக நாங்கள் போனில் கூட பேசுவதில்லை. கப்பலில் இருக்கும் சமயங்களில் போன் பேசுவதற்கு அனுமதி கிடையாது என்று அவர் என்னிடம் கூறியிருந்தார். இதனால் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அழைத்துக்கொள்வதில்லை.ஒருமுறை ஃபெங் தனக்கு உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் இருப்பதாக என்னிடம் கூறினார். உடனே நானும் சிகிச்சைக்காக அவருக்கு £55000 பவுண்டுகள் பணம் அனுப்பி வைத்தேன்.

அந்த பணத்தை அவர் திரும்பி அனுப்பி வைத்துவிடுவார். விரைவில் சீனா திரும்பியதும் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் கடந்த மாதம், அவர் மிகவும் மோசமாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், சிகிச்சைக்கு மீண்டும் பணம் தேவைப்படுவதாகவும் என்னிடம் கூறினார். என்னிடம் இதற்கு மேல் உதவி செய்ய பணமில்லை எனக்கூறி பொலிஸாரிடம் அழுதுள்ளார்.அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், தீவிர விசாரணை மேற்கொண்ட போது ஏ ஃபெங் ஒரு மாலுமி இல்லை என்பது தெரியவந்தது. மேலும் இருவரின் செல்போன எண்களையும், யி யி-ன் நெருங்கிய தோழியான சியாவோ லீ தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.யி யி-ன் நெருங்கிய தோழியான சியாவோ லீ தான், ஏ ஃபெங்-கை முதலில் அறிமுகம் செய்துவைத்துள்ளார். அவர்கள் இருவரும் நல்ல காதல் ஜோடிகளாக இருப்பார்கள் என்று அவர் நினைத்திருந்துள்ளார்.

ஆனால் சிறிது நாட்களிலேயே இருவரும் சண்டையிட்டு பிரிந்துவிட்டனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சியாவோ லீ, சிறிது நாட்கள் கழித்து ஏ ஃபெங் பெயரில் யி யி-ஐ தொடர்பு கொண்டு மீண்டும் காதலை புதுப்பித்து கொள்ளலாம் என கெஞ்சியுள்ளார்.அதற்கு யி யி சம்மதம் தெரிவித்ததை அடுத்து, ஏ ஃபெங் போலவே அடிக்கடி பேசி சிறிது சிறிதாக பணத்தை கறந்து தன்னுடைய கடன்களை அடைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த நிலையில் மோசடி என்கிற பெயரில் பொலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!