அங்கஜன், வியாழேந்திரனுக்கு ஆறுதல் பரிசு!

அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேருக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர்களாக பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த நியமனங்கள் நேற்று வழங்கப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்துக்கு அங்கஜன் ராமநாதனும், மன்னார் மாவட்டத்துக்கு, காதர் மஸ்தானும், மட்டக்களப்புக்கு எஸ். வியாழேந்திரனும், அபிவிருத்திக் குழு இணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களாவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!