வளிமண்டலத்தில் வலம் வரும் ‘பேபி டிரம்ப்’ எனப்படும் டிரம்ப் எதிர்ப்பு பலூன்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுப்பப்பட்ட பலூன், தற்போது வளி மண்டலத்திற்கு மேலே சுற்றிக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிரம்ப், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பருவநிலை தொடர்பாக ஆய்வு செய்யும் பலூனில், பேபி டிரம்ப் எனப்படும் டிரம்ப்பின் உருவம் தாங்கிய பலூன் பறக்கவிடப்பட்டது.

ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட அந்தப் பலூன் வளிமண்டலத்திற்கும் மேலாகப் பறந்து சென்றது. தற்போது அந்தப் பலூன் பூமியிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. பலூன் அருகே வைக்கப்பட்டிருந்த கேமராவில் இருந்து படங்களும், வீடியோக்களும் தற்போதும் நல்லமுறையில் இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!