ஜனவரிக்கு முன்னர் சில மாற்றங்கள் கட்சிக்குள் இடம்பெறும் – ஐ.தே.க.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ மாற்றங்கள் குறித்து அடுத்த கட்டமாக முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்மானக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகள் எதுவும் இல்லை. கட்சியின் தலைமைத்துவ மாற்றம் குறித்து ஆராயும் வகையில் கட்சிக்குள் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் இக்குழு கூடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும். அதேபோல் ஜனவரி மாதத்திற்கு முன்னர் சில மாற்றங்கள் கட்சிக்குள் இடம்பெறும்.

பிரதான பொறுப்புக்கள் சிலவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம். எவ்வாறு இருப்பினும் கட்சியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்தே பயணிப்போம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!