ஐ.தே.கட்சிக்குள் நெருக்கடியை உருவாக்க அரசாங்கம் சூழ்ச்சியா….?

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடியை உருவாக்க யாரேனும் முயற்சித்தால் அது அரசாங்கதின் சூழ்ச்சியாக இருக்கும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்தின் சூழ்ச்சியை நிறைவேற்றிக்கொடுக்கும் எவராவது இருப்பாரேயானால், அவர் அரசாங்கத்தின் சூழ்ச்சியாளர்.

ஐக்கிய தேசியக் கட்சி எவருக்கும் பிளவுப்படுத்த முடியாத கட்சி. இதனால், எவருக்கும் அஞ்ச தேவையில்லை. சிலர் குழப்பமடைந்தனர் என்பதால் நாங்கள் குழப்பமடைய போவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சி சரியான பயணத்தை மேற்கொண்டு, பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும்.எமது கட்சிக்கு ஆறரை லட்சம் வாக்காளர்களின் சவாலே இருக்கின்றது. விரிவான கூட்டணியின் ஊடாக 113 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறுவதே கட்சியின் இலக்கு எனவும் ஆசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!