ஜெனிவா மாநாட்டுக்கான தகவல்களை திரட்டுகிறது சுவிஸ் தூதரகம்! – பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

சுவிஸ் தூதரக அலுவலகத்தினால் ஜெனிவா மாநாட்டிற்கு அவசியமான தகவல் சேகரிக்கப்படுவதாக கடமை மைய அமைப்பின் ஆலோசகர் ஜபுரவெல சந்திரஜோதி தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களில் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிய 642 இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சுவிஸ் தூதரக அலுவலகம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கே இவ்வாறு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. 2418 பேர் சுவிட்சர்லாந்திற்கு செல்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை . அரசியல் பாதுகாப்பின் கீழ் சுவிட்சர்லாந்திற்கு சென்றவர்களில் பலர் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!