பௌத்த – இந்து மத கலவரத்தை தூண்டும் முயற்சியில் விக்கினேஷ்வரன் – எஸ்.பி.

இலங்கை பௌத்த நாடு அல்ல என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தற்போது குறிப்பிட்டுள்ளமை அவசியமற்ற கருத்தாகும். பௌத்த சமயத்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் மத கலவரத்தை தூண்டிவிடும் நிலைப்பாட்டிலே இவ்வாறான கருத்துக்களை இவர் குறிப்பிடுகின்றார் என காணி இராஜங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை பௌத்த நாடு அல்ல என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி விக்னேஷ்வரன் தற்போது குறிப்பிட்டுள்ளமை தேவையற்ற விடயமாகும். அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தற்போது மதத்தை இலக்காக் கொண்டு பௌத்த மற்றும் இந்து மக்கள் மத்தியில் மத கலவரங்களை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள்.

இலங்கை பௌத்த நாடு என்பதை உலக மத தலைவர்கள் பலர் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். 74 சதவீதம் சிங்கள பௌத்த மக்கள் வாழ்கின்றமையினால் அரசியலமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. பிற மதங்களை பாதுகாத்து பௌத்த மதம் எழுச்சி பெறுகின்றது. என்று சர்வதேச மத தலைவர்கள் கௌரவித்துள்ளார்கள்.

உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் என்ற ரீதியில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஷ்வரன் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.தேரவாத பௌத்த மத அடிப்படை கொள்கை இலங்கையில் இருந்து தோற்றம் பெற்றது என்பதை அனைவரும் தெரிந்துக் கொள்வது அவசியம். இலங்கை பௌத்தமத நாடாகவே சர்வதேசத்தில் அடையாளப்படுத்தப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!