உலகில் அழகிப் பட்டங்களை வென்ற கறுப்பினப் பெண்கள்…!!

உளவியல் மற்றும் மகளிர் குறித்த ஆய்வுகள் துறையில் பட்டப்படிப்பு பயின்று வரும் டோனி-ஆன் சிங், மருத்துவம் பயின்று டாக்டராக விரும்புவதாக, பின்னர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.ஜமைக்காவில் புனித தாமஸில் உள்ள சிறுமியும், உலகெங்கும் உள்ள அனைத்து சிறுமிகளும் – தயவுசெய்து உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

உலக அழகிப் பட்டத்துக்கான 69வது போட்டியில் ஜமைக்காவை சேர்ந்த டோனி-ஆன் சிங் மகுடம் சூட்டினார். இன பாகுபாடு உணர்வுடன் நடந்து கொள்வதாக ஏற்பாட்டாளர்கள் மீது விமர்சனங்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு முடிவு மாறுபட்டதாக இருந்தது.இந்தப் போட்டியில் பட்டம் வென்ற ஜமைக்காவைச் சேர்ந்த நான்காவது நபராக 23 வயதான இந்த மாணவி உள்ளார். 111 நாடுகளில் இருந்து வந்தவர்களின் போட்டியை முறியடித்து இந்தப் பட்டத்தை அவர் வென்றுள்ளார்.

உளவியல் மற்றும் மகளிர் குறித்த ஆய்வுகள் துறையில் பட்டப்படிப்பு பயின்று வரும் டோனி-ஆன் சிங், மருத்துவம் பயின்று டாக்டராக விரும்புவதாக, பின்னர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.ஜமைக்காவில் புனித தாமஸில் உள்ள சிறுமியும், உலகெங்கும் உள்ள அனைத்து சிறுமிகளும் – தயவு செய்து உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கென ஒரு மதிப்பு இருக்கிறது, உங்கள் கனவுகளை உங்களால் எட்ட முடியும், நீங்களும் முக்கியமானவர்கள் என்பதை தயவு செய்து அறிந்திடுங்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜோஜிபினி ட்டுன்ஜி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். இந்தத் துறையில் அழகு என்பதற்கான வரையறைகளை வெளிப்படையாக விமர்சித்தவர் அவர். இயற்கையான தனது தலைமுடியுடன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

என்னைப் போன்ற தோற்றம் உள்ள – என்னைப் போன்ற தோல் மற்றும் தலைமுடி உள்ள – பெண்கள் ஒருபோதும் அழகானவர்களாக மதிக்கப்படாத உலகில் நான் வளர்ந்திருக்கிறேன் என்று வெற்றிக்குப் பிறகு அவர் கூறியுள்ளார்.அது இன்று முடிந்துவிடும் என்று நான் நினைக்கிறேன். குழந்தைகள் என்னையும், என் முகத்தையும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தங்களுடைய முகங்கள் என்னில் தெரிவதை அவர்கள் உணர வேண்டும் என்று விரும்புகிறேன்.இன்றைய இளம்பெண்களுக்கு நாம் தலைமைத்துவம்தான் வலிமை மிக்கது என்பதை கற்பிக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.

அவருக்கு முன்னதாக மூன்று அமெரிக்க அழகிப் போட்டிகள், நீண்டகாலமாக பாரபட்சமான செயல்பாடுகளுக்காக விமர்சிக்கப்பட்டவற்றில், அனைத்திலுமே 2019 ஆம் ஆண்டுக்கான பட்டங்கள் கறுப்பினப் பெண்களுக்கே அளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!