100 நாள் வேலைத் திட்ட சர்ச்சை – மைத்திரிக்கு ஜயம்பதி பதிலடி!

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கிய தரப்பினரே, 100 நாள் வேலைத்திட்டத்தை உருவாக்கினர் என்றும் அது தனி நபர் தயாரித்த திட்டம் அல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலைத்திட்டம் பகிரங்கமாக அறிவிக்கப்படும் முன்னர் நடைபெற்ற இறுதிப் பேச்சுவார்த்தையில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். அதில் திட்டம் குறித்து வார்த்தை வார்த்தையாக கலந்துரையாடப்பட்டது.

பொது வேட்பாளரை தெரிவு செய்யும் முன்னரே 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான நிலைப்பாடுகள் காணப்பட்டன. மாதுளுவாவே சோபித தேரர் தலைமையிலான நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பே முதலில் இந்த திட்டத்தை முன்வைத்தது. மாதுளுவாவே சோபித தேரர் உட்பட அவரது அமைப்பினர் 180 வேலைத்திட்டங்களை முன்வைத்தனர். ஐக்கிய தேசியக் கட்சி அதனை 100 நாள் வேலைத்திட்டமாக குறைத்தது எனவும் ஜயம்பதி விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

மாதுளுவாவே சோபித தேரரின் 76ஆவது பிறந்த தின நிகழ்வில் ஜனாதிபதி 100 நாள் வேலைத்திட்டம் குறித்து வெளியிட்ட கருத்து பற்றி ஊடகங்கள் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜயம்பதி விக்ரமரத்ன இதனை கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!