சீனா தனது அயல்நாடுகளை மிரட்டுகின்றது- அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனா தனது அயல்நாடுகளை அச்சுறுத்துவதற்காக சர்ச்சைக்குரிய தென் சீனா கடல்பகுதியில் ஏவுகணைகளை நிலைகொள்ளச்செய்துள்ளது என அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார்.

தென்சீனா கடல்பகுதியில் கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள்,விமானஎதிர்ப்பு ஏவுகணைகள் போன்றவற்றை சீனா நிலை கொள்ளச்செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா இந்த ஆயுதங்களை மிரட்டுவதற்கும் அச்சுறுத்துவதற்குமே பயன்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகம் சீனாவுடன் ஆக்கபூர்வமான உறவுகளையே விரும்புகின்றது எனினும் அவசியம் ஏற்பட்டால் அந்த நிலை மாறாலாம் எனவும் மட்டிஸ் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!