சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அதிரடி மாற்றம் – பொதுச்செயலரின் பதவி பறிப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை சிறிலங்கா அதிபரும், கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலராக இருந்த அமைச்சர் துமிந்த திசநாயக்க, கட்சியின் தற்காலிக தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுச்செயலர் பதவி, பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாசவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அமைப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிபர்களான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரத்ன ஆகியோர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் மூத்த துணைத் தலைவர்களாக, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர்கள் ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கட்சியின் துணைத் தலைவர்களாக, அமைச்சர்கள் சரத் அமுனுகம, மகிந்த அமரவீர, மற்றும் முதலமைச்சர் சான் விஜேலால், முன்னாள் அமைச்சர்கள் தயாசிறி ஜெயசேகர, சுமேதா ஜெயசேன மற்றும் பியசேன கமகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!