ஆட்சேபனை தெரிவிக்க மைத்திரி,ரணிலுக்கு கால அவகாசம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு, அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க உயர் நீதிமன்றம் மார்ச் 6 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலேயே குறித்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!