அமெரிக்காவின் கூட்டுப் பயிற்சிக்கு மரைன் கொமாண்டோக்களை அனுப்பியது சிறிலங்கா

அமெரிக்கா நடத்தும், RIMPAC-2018 என்ற பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க, சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த, 25 கொமாண்டோக்கள், அவுஸ்ரேலியாவுக்குச் சென்றுள்ளனர்.

26 நாடுகள் பங்கேற்கும், RIMPAC-2018 கூட்டுப் பயிற்சி, எதிர்வரும், 27ஆம் நாள் தொடக்கம், ஓகஸ்ட் 2ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து, அமெரிக்காவின் பேர்ள் துறைமுகம், ஹொனொலுலு, மற்றும் ஹவாய் ஆகிய இடங்களில் இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெறுகிறது.

இந்த ஆண்டு கூட்டுப் பயிற்சில் முதல் முறையாக சிறிலங்கா கடற்படைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 25 கொமாண்டோக்கள் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க, கடந்த மே 21ஆம் நாள், அவுஸ்ரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்தக் கூட்டுப் பயிற்சி ஈரூடக நடவடிக்கைகள், நகரப் புற நடவடிக்கைகள், சூட்டுப் பயிற்சிகள், போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!