ஓகஸ்ட்டுக்கு முன்னர் தேர்தல்கள் இல்லை?

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரையில், எந்தவொரு தேர்தலையும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்துக்கு, தற்போதைய அரசாங்கம் வந்துள்ள​தாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அரசாங்கம் என்ற ரீதியில், பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் உள்வீட்டுப் பிரச்சினைகள் பல உள்ளதால், அவற்றுக்குத் தீர்வு கண்ட பின்னரே, தேர்தலை நோக்கி நகர்வது சாத்தியமானதென்றும், ரணிலிடம் பசில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் வரையில் கால அவகாசம் இருப்பதால், அதுவரையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க அவசரப்பட்டு தேர்தலை நோக்கி நகராமலிருப்பதற்கே அரசாங்கம் ஆலாலோசித்து வருவதாகவும், அறிய முடிந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!