தற்கொலை செய்ய கயிறு தாருங்கள்: தாயிடம் சிறுவன் கதறல்

பள்ளியில் மாணவர்கள் கேலி செய்வதால், ‘தற்கொலை செய்து கொள்ள துாக்கு கயிறு தாருங்கள்’ என, 9 வயது சிறுவன் கதறும், ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த யார்ரகா பேலசிடம், நான்காம் வகுப்பு படிக்கும் அவரது, 9 வயது மகன் குவாடன், துாக்கு கயிறு கேட்டு கதறும் வீடியோவை, யார்ரகா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

குவாடனின் தலை பெரிதாகவும், கை, கால்கள் போதிய வளர்ச்சியின்றி, குள்ளமாக உள்ளான்.இதனால், பள்ளியில், சக மாணவர்கள் அவனை கேலி செய்கின்றனர். இதற்காகத்தான் அந்த சிறுவன், தன் அம்மாவிடம், ‘தற்கொலை செய்து கொள்ள கயிறு தாருங்கள்’ என, கேட்டு அழுதிருக்கிறான்.

‘என் மகனை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சென்ற போது, அவனை, சக மாணவர்கள் கேலி செய்வதை பார்த்தேன். ‘ஒருவரை கேலி, கிண்டல் செய்வதால் ஏற்படும் விளைவுகளை, பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், இந்த வீடியோவைப் பார்த்து உணர வேண்டும்’ என, யார்ரகா பதிவிட்டுள்ளார். ‘என் இதயத்தை நானே குத்திக்கொள்ள விரும்புகிறேன்; யாராவது என்னை கொலை செய்து விடுங்களேன்’ என, சிறுவன் கதறும் வீடியோ, பார்ப்போர் நெஞ்சங்களை பதற வைக்கிறது.வீடியோவைப் பார்த்தவர்கள், ‘டீம் குவாடன்’ என, ‘ஹேஷ்டேக்’ உருவாக்கி, அதில் சிறுவனுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!