கொரானா அச்சம்: முகமூடிகளை வாங்க நீண்ட வரிசையில் நிற்கும் தென்கொரிய மக்கள்!

தென்கொரியாவில் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் முகமூடிகளை வாங்குவதற்காக பல மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் வரிசையில் நிற்கும் காட்சி வைரலாகியுள்ளது. அந்நாட்டின் டேகு நகரம், கொரானா வைரஸ் தீவிரத்தை கருத்தில் கொண்டு சிறப்பு பராமரிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு, பாதுகாப்பு முகமூடி விற்கப்படும் இ-மார்ட் கடைக்கு வெளியில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கும் காட்சியை ட்ரோன் கேமரா படம் பிடித்துள்ளது. டேகு(Daegu) நகரில் 14 லட்சம் பாதுகாப்பு முகமூடிகளை இ-மார்ட் நிறுவனம் பாதி விலையில் விற்பனை செய்து வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!