வட- கிழக்கில் கூட்டமைப்பே வெற்றி பெறும்!

வடக்கு, கிழக்கில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அங்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைதான் ஓங்கி நிற்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரான பேராசியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை கைப்பற்றும் என்பதை எவரும் மறுக்க முடியாது.

எ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் வடக்கு, கிழக்கில் தனித்தனியே போட்டியிடக்கூடும். ஆனால், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் எமது புதிய கூட்டணியின் கீழ் தான் எமது பங்காளிக் கட்சிகள் ஓரணியில் நின்று ஒரே சின்னத்தில் போட்டியிடும்.

எமது கூட்டணி இந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. ஆனால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம்.ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை நாம் நிறுவியபோது ஆரம்பத்தில் இதைப் பார்த்து ஐக்கிய தேசியக் கட்சியினர் கிண்டலடித்தார்கள்.

ஆனால், அந்த கட்சியினர் இன்று சிதறுண்டு காணப்படுவதைப் பார்க்கும் போது தான் பரிதாபமாக இருக்கின்றது.<ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை படுதோல்வியடையும் என்பது உறுதி. இதற்கு ரணிலும் சஜித்துமே முக்கிய காரணம். எமது கட்சியின் வாசல் திறந்தே இருக்கின்றது. எவரும் எம்முடன் வந்து இணையலாம் என குறிப்பிட்டுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!