நாமலின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 சந்தேகநபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடை ஜூலை மாதம் 23 ஆம் திகதி வரை தளர்த்தப்படுவதாக கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட 15 மில்லியன் ரூபா நிதி N.R Consultancy நிறுவனத்தில் முதலீடு செய்ததன் ஊடாக நிதி மோசடி சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக பொலிஸ் நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் தாக்கல் செய்த முறைப்பாடு இன்று அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!