கூட்டமைப்பின் 6 எம்.பிக்களின் கதி!

திட்டமிட்டபடி இன்று நள்ளிரவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் வாய்ப்பை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதிய உரிமைகளைப் பெறுவதற்கு நாடாளுமன்றத்தில் ஐந்தாண்டு காலத்தை முடித்திருக்க வேண்டும்.

அதன்படி, ஓய்வூதிய உரிமைகளை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகளவில் இழக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. அக் கட்சியை சேர்ந்த 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய உரிமையை இழக்க நேரிடும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜே.வி.பியை சேர்ந்த ஒருவரும் ஓய்வூதிய உரிமைகளை இழக்க கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!