வேட்புமனுவில் பிக்குகளுக்கு இடமளிக்கக் கூடாது – அஸ்கிரிய மகாநாயக்கர்

பௌத்த பிக்குகள் எதிர்காலத்தில் அரசியல் பதவிகளைக் கோருவதை தடுக்க தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர், வண. வரககொட ஞானரதன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

அஸ்கிரிய மகா விகாரைக்கு தேர்தல்கள் ஆணையத் தலைவர் நேற்று சென்றிருந்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

“சிறிலங்காவின் தேர்தல் சட்டம் பழமையானது என்பதால், அவசரமாக அதில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பௌத்த பிக்குகளுக்கு இடமளிக்கக் கூடாது.

பௌத்த மதகுருமார் அரசியல் பதவிக்கு போட்டியிட அனுமதிக்கப்பட்டால், அது புத்த சாசனத்துக்கு பெரும் அடியாக இருக்கும்.”’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நேற்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கரை சந்தித்த போதும், அவரும் இதேவிதமான கருத்தையே வெளிப்படுத்தினார் என தேர்தல்கள் ஆணைய தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!